بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டவந்தான் ஷெய்தான்.
அல்லாஹ்விடமிருந்து மனிதர்களை தூரமாக்கின்றவந்தான் ஷெய்தான்.
வைராக்கியம் கொண்டவந்தான் ஷெய்தான்.
மனிதர்களை வழிகேட்டில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டவந்தான் ஷெய்தான்.
எனவே அந்த ஷெய்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமாறு, அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.
இந்த ஷெய்தானின் சூழ்ச்சிகளில் இருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்வது கடமையாகும்.
ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்.. அதுவும் முடியாத போது, நல்ல விடயங்களில் மிக நல்ல விடயங்களை குறைவாகக் காட்டி; ஒரு குறைந்த நல்ல விடயத்திலே அந்த அடியானை அவன் கவனம் செலுத்த வைத்துவிடுவான். அதன்மூலம் அந்த அடியான் மிக அதிகமான நலவுள்ள செயலை செய்யமுடியாத நிலைக்கு ஆலாக்கிவிடுவான்.
இன்-ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஜுமுஆ உரையை செவிமடுப்போம்! ஆதாரங்களுடன் மேற்கூறப்பட்ட ஷெய்தானின் தீங்குகளை அறிந்து கொள்வோம்! அல்லாஹ்வும் அவனது தூதரும் எமக்கு கற்றுத் தந்துள்ள; இந்த ஷெய்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்ற வழிகளை கற்றுக் கொள்வோம்!
ஜுமுஆ உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.