அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 14

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 14

64 – اَلشَّكُوْرُ – அதிகமாக நன்றி செலுத்துபவன்

65 – اَلْحَلِيْمُ – சகிப்புத்தன்மையுடையவன்

قَالَ تَعَالَى: وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன் (ஸூரத்துத் தகாபுன்: 17)

66 – اَلْبَرُّ – பேருபகாரம் செய்பவன்

قَالَ تَعَالَى: اِنَّهٗ هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்). (ஸூரத்துத் தூர்: 28)

67 – اَلشَّاكِرُ – நன்றி பாராட்டுகின்றவன்

قَالَ تَعَالَى: وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும் அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகிறவனாக, யாவையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துன் நிஸா: 147)

68 – اَلْوَهَّابُ – கொடையாளன்

قَالَ تَعَالَى: اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌ۚ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லது (யாவரையும்) மிகைத்த, பெருங்கொடையாளனாகிய உமதிரட்சகனின் அருள் பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா? (ஸூரத்து ஸாத்: 9)

69 – اَلْقَاهِرُ – அடக்கி ஆள்பவன்

قَالَ تَعَالَى: وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன், (ஸூரத்துல் அன்ஆம்: 18)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)