அல்லாஹ்வின் மாதம் முஹர்ரமும்; ஹிஜ்ரி ஆண்டும்; ஆஷூரா தினமும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

باب التاريخ من أين أرخوا التاريخ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلاَّ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ.

ஆண்டுக் கணக்கும், மக்கள் (ஸலபுகள்) எப்போதிருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணக்கை ஆரம்பித்தார்கள் என்பதும்.

சஹ்ல் பின் சஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஸலபுகள் ஆண்டுக் கணக்கை) நபி ﷺ அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப் பட்ட (அவர்களுடைய 40ஆம் வய)திலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி ﷺ அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். (ஸஹீஹ் அல்-புகாரி)

عن عبدالله بن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال :اغْتَنِمْ خَمْسًا قبلَ خَمْسٍ: شَبابَكَ قبلَ هِرَمِكَ، وصِحَّتَكَ قبلَ سَقَمِكَ، وغِناكَ قبلَ فَقْرِكَ، وفَراغَكَ قبلَ شُغْلِكَ، وحَياتَكَ قبلَ مَوْتِكَ . الإمام الألباني (ت ١٤٢٠)، صحيح الترغيب ٣٣٥٥  •  صحيح

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வருவதற்கு முன் ஐந்து (அருட் கொடைகளைப்)  பயன்படுத்திக் கொள்ளுங்கள்

1 – முதுமை வருவதற்கு  முன் உங்களது  வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2 – நோய் வருவதற்கு  முன் உங்களது ஆரோக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3 – வறுமை  வருவதற்கு  முன் உங்களது  செல்வங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4 – வேலை  வருவதற்கு முன் உங்களது ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5 – மரணம்  வருவதற்கு  முன் உங்களது வாழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்-ஷா அல்லாஹ் கீழ்க் காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதம், ஹிஜ்ரி ஆண்டு மற்றும் ஆஷூரா தினத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)