بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
இலங்கை மற்றும் இன்னும் இதர நாடுகளில்; மக்கள் ‘ரிஸ்க்கை’ பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும், உணவு மற்றும் ஏனைய பொருட்களில் தட்டுப்பாடும் காரணமாக; மக்கள் பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
அதிகமான மக்கள் மற்றும் விதிவிலக்கு இல்லாமல் முஸ்லிம்களும் பின்வருமாறு கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இக்கட்டான இந்த நிலைக்கு காரணம் இன்றைய ஆட்சியாளர்களே!
அந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இவ்வாறு இருக்க வில்லை.
இவர்கள் வந்தாலே! மக்களுக்கு கஷ்டமும் துன்பமும் தான்.
இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை ஒரு உண்மையான முஸ்லிம் கூறமுடியுமா?
இன்ஷா-அல்லாஹ்! மேற்கூறப்பட்ட கேள்விக்கான பதிலை ஆதாரங்களுடன்; இந்த உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்!
இன்-ஷா அல்லாஹ்! இந்த விடயத்தில் (அகீதாவின்) மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கையை தெளிவாக நாமும் கற்று எமது குடும்பம், நண்பர்கள், மற்றும் முஸ்லிமான அனைவருக்கும் எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.