بسم اللــــه الرحمـــــــــن الرحيم
விளக்க உரை: அபூ-அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹின்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (பனீ இஸ்ராயீல்: 36)
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தனங்களையும் பேணிக்காத்துக் கொள்ளவும், “அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன். (ஸூரத்துந் நூர்: 30)
பார்வை என்பது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் ஒரு அம்பு’ (என்று சில உலமாக்கள் கூறியுள்ளார்கள்)
ஒரு ஆண் எவ்வளவு மறைக்க வேண்டும்? ஒரு பெண் எவ்வளவு மறைக்க வேண்டும். ஒரு பெண் சாதாரண ஆடையை அணிந்த நிலையில், தனது அழகைக் காட்டிக்கொண்டு யார் யார் முன்னிலையில் இருக்கலாம்? ஓரு மஹ்ரமானவர் முன்னிலையில் எந்த அளவு மறைத்திருக்க வேண்டும்?
இன்-ஷா அல்லாஹ் இக் கேள்விகளுக்கான பதிலை கீழ்க்காணும் உரையை செவிமடுத்துக் கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.