بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததிக’
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ بِيَدِهِ وَقَالَ ” يَا مُعَاذُ وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ ” . فَقَالَ ” أُوصِيكَ يَا مُعَاذُ لاَ تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ” . صحيح (الألباني)
முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எனது கையைப் பிடித்தவராக, ‘முஆதே அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் நேசிக்கிறேன், அல்லாஹ்வின் மீதுஆணையாக உங்களை நான் நேசிக்கிறேன்,’ ‘முஆதே ‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததிக’ என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் சொல்வதை நீர் விட்டுவிடாதீர். என்று நான் உங்களுக்கு அறிவுரை செய்கிறேன். என்று கூறினார்கள். (அஹ்மத், அபூதாவுத் -ஸஹீஹ் அல்-அல்பானி)
இன்ஷா அல்லாஹ்! மேற்கூறப்பட்ட ஹதீஸ் விளக்க உரையை கீழ்க்காணும் சிறு தலைப்புக்கள் மூலம் ஆதாரங்களுடன் கற்று அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!
❆ அல்லாஹ்வுக்காக ஒரு நபரை நேசியுங்கள் அதனை அவருக்கு கூறுங்கள்.
❆ அல்லாஹ்வை நினைவு கூறுங்கள் – நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன்.
✔ நாவாலும் உள்ளத்தாலும் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
✔ முன்னேற்றத்தை அடைந்து கொள்வோம்!
✔ அமைதியைப் பெற்றுக் கொள்வோம்!
✔ மலாயிகா மார்களின் இறக்கைகளால் போர்த்திக் கொள்வோம்!
✔ தினமும் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்!
✔ எங்களுடைய தராசுகளை பாரமாக்கிக் கொள்வோம்!
✔ சொர்க்கத்தின் பொக்கிஷங்களை அடைந்து கொள்வோம்!
✔ ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்வோம்!
✔ அல்லாஹுத் தஆலாவிடம் பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.