بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
❆❆ அண்டை வீட்டாருக்குத் தொல்லை (நோவினை) செய்ய வேண்டாம்; அவர்களுக்கு நலவு செய்யுங்கள். விருந்தாளியைக் கண்ணியப்படுத்துங்கள். நல்லதைப் பேசுங்கள்; அல்லது வாய் மூடி இருங்கள்.
❆❆ நலவு என்பது கட்டாயக் கடமையாகும்; அல்லது விரும்பத்தக்க விடயமாகும்.
❆❆ மௌனமாக இருக்கின்றவர் தப்பித்துக் கொண்டார்.
❆❆ நல்லதை பேசுங்கள்; தீய விடங்களில் இருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
❆❆ எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே! சிறந்த முஸ்லிம்.
❆❆ எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ; அவர் சொர்க்கத்திற்கான உத்தரவாததைப் பெறுகின்றார்.
❆❆ அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் கவனஞ் செலுத்தாமல் மொழிகின்றான்; அதனால் அவனது தகுதி உயர்கிறது. அடியான் அல்லாஹ்வுக்கு கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான்; அச்சொல்லால் அவன் நரகில் தள்ளப்படுகிறான்.
❆❆ ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!
❆❆ மனிதனின் உறுப்புகள் எல்லாம் தினமும் நாவிடம் மன்றாட கூடியனவாக இருக்கும். நாவே இறைவனை பயந்து நடந்து கொள்! நாங்கள் உன்னைக் கொண்டே உள்ளோம். நீ நல்ல முறையில் இருந்தால், நாங்களும் நல்ல முறையில் இருப்போம். நீ கோணலாகி விட்டால், நாங்களும் கோணலாக ஆகிவிடுவோம்.
கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! நாவினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.