மஹ்ரம் என்றால் என்ன? அவர்கள் யார்?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

உலகம் இன்று ஆண் பெண் கலப்பினூடே அனாச்சாரங்களில் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருகிறது.

இந்த ஆண் பெண் கலப்பு என்பது அனாச்சாரத்தின் ஊற்று வாயாக இருக்கிறது.

இந்த ஆண் பெண் கலப்பு அனாச்சாரங்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்ற நிலையையும் தாண்டி மன உளைச்சல், தற்கொலை என்று சிகரம் தொட்டு நிற்கிறது.

இந்த அனாச்சாரங்களினால் தோன்றிய சமூக சீர் கேடுகளில் இருந்து மனித சமூகத்தை மீட்டெடுக்க பல பில்லியன்களை உலகம் செலவு செய்தும் விடிவின்றி தவிக்கிறது.

இந்த முஸ்லிம் சமூகமும் இன்று ஆண் பெண் கலப்பு அனாச்சாரத்தின் ஆழத்தில் சுழியோடி விடிவைத் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்த அனாச்சாரங்கள் எங்கிருந்து தோற்றம் பெறுகின்றதோ! அந்த வாயிலிலேயே அதற்குறிய அரணையும் இஸ்லாம் மார்க்கம் அமைத்திருக்கிறது.

இப்னு அப்பாஸ்  رضي الله عنه அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’… (புஹாரி, முஸ்லிம்)

இந்த மஹ்ரம் எனும்பாதுகாப்பு அரணை எப்படி தெரியாமல் இருக்கமுடியும்; முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது.   

இந்த பித்னாவின்-அனாச்சாரத்தின் விளிம்பிலிருந்து உலகம் மீள வேண்டும் என்றால்; அது அல்-குர்ஆனினதும் அஸ்-ஸுனாவினதும் போதனையின் பால் மீள வேண்டும்.

இந்த இஸ்லாமிய கல்வியின் பால் பொடுபோக்காகவுள்ள முஸ்லிம் சமூகம் அதன் பால் திரும்பி அதனை நடைமுறைப்படுத்தி அனாச்சாரத்தின் வாயிலில் பதுகாப்பு அரணிட்டாலே அன்றி மீட்சி பெற முடியாது.

இந்த பித்னா-அனாச்சாரத்திலிருந்து மீண்டெழுந்திட அல்-குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் என்ன பேசுகின்றது? என்பதை கற்றுக் கொள்வது முஸ்லிமான ஆண் மற்றும் பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

இந்த ஆண் பெண் கலப்பு அனாச்சாரத்திலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும், தனது சமூகத்தையும் கீழ்வரும் கேள்விகளுக்கான பதிலினூடே இன்-ஷா-அல்லாஹ் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!  

இந்த மார்க்கத்தில் மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன?

மஹ்ரம் என்றால் யார்?

மஹ்ரமின்  வரைவிலக்கணம் என்ன?

இரத்த உறவு (வம்சாவளி) மூலம் ஏற்படும் (மஹ்ரம்கள்) யார்?

பால்குடி உறவு மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

இந்த பாடம் இரண்டு தொடர் பாடங்களாகும்.

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)