ரமழான் முடிவடைந்த போதிலும் அல்லாஹ்வுடைய உரிமை முடிவடையாது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

அல்-அல்லாமா ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்

ரமழான் மாதம் முடிவடைந்த போதிலும்; அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய உரிமை, கடமை என்பது மரணம் வந்தடைவதின் மூலமேயன்றி முடிவடையாது.

﴾وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ﴿

உமக்கு (யகீன் என்னும்) மரணம் வரும் வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக! [ஸூரா அல்-ஹிஜ்ர்: 99]

அல்லாஹ் அவன் ரமழானுடைய இரட்சகன், மேலும் அவன் ஷவ்வாலின் இரட்சகன், மேலும் அவன் வருடத்தின் அனைத்து மாதங்களுடைய இரட்சகனாக இருக்கின்றான்.

ஆகவே அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை இறையச்சம் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உங்களுடைய மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நிச்சயமாக அது (உங்களுடைய மார்க்கம்) அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவிடத்தில் உங்களுடைய மூலதனமாக இருக்கின்றது.

மேலும் அது உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க கூடியதாக இருக்கின்றது.

ஆகவே அனைத்து மாதங்களிலும், அனைத்து நேரங்களிலும் உங்களுடைய மார்க்கத்தை நீங்கள் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; (அதனை) இறுக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக ரமழான் மாதமானது அது நன்றி செலுத்துவதைக் கொண்டு பின்தொடரப்பட வேண்டும். மேலும் பாவமன்னிப்பு கோருவதைக் கொண்டு பின்தொடரப்பட வேண்டும்.

மேலும் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கும், நின்று வணங்குவதற்கும் உண்டான வசதி வாய்ப்பை எங்களுக்கு அவன் ஏற்படுத்தி தந்ததிற்காக சந்தோஷமடைவதைக் கொண்டு பின்தொடரப்பட வேண்டும்.

எனவே நாம் இந்த அருட்கொடையை கொண்டு மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த (ரமழான்) மாதம் முடிவடைந்துவிட்டது என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடையமாட்டோம்;

மாறாக (இந்த மாதத்தை) அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதைக் கொண்டு பூரணப்படுத்தினோம் என்பதற்காகவே நிச்சயமாக மகிழ்ச்சியடையக் கூடியவர்களாக இருக்கின்றோம்.

﴾قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا ؕ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ﴿

(அது) அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும், ஆகவே, அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும், இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (ஸூரா யூனுஸ்: 58)

மேலும் கேளிக்கையிலும், வீண் விளையாட்டிலும் அதிகமான (நேரத்தை) வீணடிப்பதை விட்டும் அச்சம் கொண்டு எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். மேலும் அதிக பொடுபோக்கு மற்றும் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை புறக்கணிப்பதை விட்டும் அச்சம் கொண்டு எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஷெய்தான் உங்களுடைய நல்லமல்களை வீணடிப்பதற்கும், நீங்கள் செய்த அனைத்து நற்கருமங்களை முழுமையாக அழிப்பதற்கும் ஆவலுடன் இருக்கின்றான்.

ரமழான் முடிவடைந்துவிட்டது என்றால் (மனிதன்) சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியாகின்ற ஒருவனைப் போல் சுதந்திரமானவனாக ஆகுகின்றான் என்று சில மக்களுக்கு ஷெய்தான் வசீகரம் செய்து காட்டி ஏமாற்றுகிறான்.

ஆகவே (அதன் காரணமாக அம்மனிதன்) ரமழான் முடிந்தவுடன் வீண் விடயங்கள், கேளிக்கைகள், அதிக பொடுபோக்கு மற்றும் தொழுகையை சரிவர நிறைவேற்றாமல் வீணடிப்பது போன்ற எண்ணற்ற பாவமான செயல்களின் பக்கம் விரைந்து செல்கின்றான்!

நீங்கள் நூலை (சிறிது சிறிதாக சேகரித்த பின்பு அதை) திரித்து கடினமாக கட்டியதன் பிறகு அதனை அவிழ்த்து விடாதீர்கள் (இதை போன்று உங்களுடைய அமல்களை வீணடித்து விடாதீர்கள்).

﴾وَلَا تَكُوْنُوْا كَالَّتِىْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ﴿

(மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிடவேண்டாம். அவள் மிக சிரமப்பட்டு நூற்ற நூலை, தானே தறித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். (ஸூரா அன்-நஹ்ல்: 92)

எனவேதான் அல்லாஹ்வின் அடியார்களே!

அல்லாஹ்வை இறையச்சம் கொண்டு நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்த நல்லமல்களை மிகவும் கவனமாக பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் (அல்லாஹ்விற்காக நிறைவேற்றிய கடமைகளில்) செய்த உங்கள் குறைபாடுகளுக்காகவும்,

உங்களின் குற்றங்களுக்காகவும் அல்லாஹ்வின் பால் திரும்பி பாவமன்னிப்புக் கேளுங்கள்.

ஏனென்றால் நிச்சயமாக யார் இவ்வாறு அல்லாஹ்வின் பால் திரும்பி பாவமன்னிப்பு கேட்கின்றார்களோ, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான்.

தமிழாக்கம்: அபூ முஆத் அப்துல்லாஹ் அல்-ஹிந்தி வஃப்பகஹுல்லாஹ்

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)