• Home
  • சொற்பொழிவுகள்
  • Naseeha
  • ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

 بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

֍ அல்லாஹ்வின் அர்ஷை சுமந்துகொண்டிருக்கும் மலக்குமார்கள் எப்படிப்பட்டவர்கள்?

֍ மனிதர்களுக்காக சேவை செய்யும் மலாயிகாமார்களின் மகத்தான ஒரு பணி என்ன?

֍ அல்லாஹ்வின் ஸலவாத் என்றால் என்ன?

֍ மலாயிகாமார்கள் யாருக்காக துஆச் செய்கிறார்கள்?

֍ அல்லாஹ்வின் ரஹ்மாவும் பாவமன்னிப்பும் வேண்டுமா?

ஷெய்க் அவர்களுக்கு! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. அவர்களின் அறிவிலும் வாழ்விலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக. அவருடைய குடும்பத்திலும் அவருடைய ஏனைய அனைத்து விடயங்களிலும் அல்லாஹ் பரகத் செய்வானாக.

இந்த உலகத்தின் அவசர தேவைகளுக்காகவும், ஷைத்தானின் சதிவலை காரணமாகவும் அல்லது சரியான மார்க்க அறிவு இல்லாமையினாலும்; அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் இபாதாக்களைவிட்டும் நாம் மிகத்தூரமாக இருக்கிறோம்.

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் இந்த நல்லுபதேசத்தை செவிமடுத்து நாமும் எமது குடும்பமும் பயன்பெறுவதோடு எம்மைச் சூழ உள்ளவர்களுக்கும் எத்திவைப்போம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Reasons and Actions which cause the Angels to make Dua for the Believers

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)