• Home
  • ஹஜ்
  • வருடத்தின் சிறந்த பத்து நாட்கள் – அதுதான் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்.PDF

வருடத்தின் சிறந்த பத்து நாட்கள் – அதுதான் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்.PDF

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

விளக்கவுரை: அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)  

தொகுப்பு: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

அன்புமிக்க சகோதரர்களே!

அல்லாஹ் தபாரக வ தஆலா தன்னுடைய மேலான பேச்சான திருக்குர்ஆனில் கூறுகிறான்:

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ‌

மேலும் உமதிரட்சகன் தான் நாடியவற்றைப் படைக்கிறான், தான் விரும்பியவற்றை  தேர்ந்தெடுக்கின்றான். [சூரா அல் கஸஸ்: 68]

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா தான் நாடியதை படைக்கக் கூடியவனாக இருக்கின்றான். அதேபோல் தான் நாடியதை மேன்மைப்படுத்தி தேர்ந்தெடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ் தேர்ந்தெடுத்த மேன்மைபடுத்திய ஒரு படைப்பு தான் இந்த மனித படைப்பாகும்.

அல்லாஹ் தபாரக வ தஆலா கூறுகிறான்:

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏

மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம், கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து சென்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளித்தோம், நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட (தகுதியில்) நாம் அவர்களை மிகமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம். [சூரா அல் இஸ்ரா: 70]

அதேபோல் அல்லாஹ் தபாரக வ தஆலா ரஸூல் மார்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை மேன்மை படுத்தினான்.

அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ‌

நபிமார்களில் சிலரை, வேறு சிலரை விடவும் நிச்சயமாக நாம் மேன்மையாக்கி வைத்தோம் [சூரா அல் இஸ்ரா: 55]

மேலும் கூறுகிறான்:

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ

அத்தூதுவர்கள் அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம் [சூரா அல் பகரா: 253]

மேலான இந்த (தீனை) மார்க்கத்தை எத்தி வைப்பதற்காக எவ்வாறு அல்லாஹ் தபாரக வ தஆலா மனிதர்களிலிருந்து ரஸூல்மார்களை தேர்ந்தெடுத்தானோ அதேபோல் அந்த நபிமார்களுக்கு மத்தியிலும், ரஸூல்மார்களுக்கு மத்தியிலும் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தி வைத்துள்ளான்.

எனவே அல்லாஹ் தபாரக வ தஆலா தான் நாடியவைகளை படைக்கின்றான்; தான் நாடியவைகளை தேர்ந்து எடுக்கிறான்; தான் நாடியவைகளை மற்ற படைப்பினங்களை விட மேன்மை படுத்தி வைக்கின்றான்.

அந்த வகையில் அல்லாஹ் தபாரக வ தஆலா படைத்த இந்த உலக வாழ்க்கையின் வருடங்களில், மாதங்களில், நாட்களில், மணித்தியாலங்களில் சிலவற்றை அவன் தேர்ந்தெடுக்கிறான்.

தொடர்ந்து படிக்க..

ஷெய்க் அவர்களின் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்; என்ற இந்த  பாடத்தை முழுமையாக தெளிவான ஆதாரங்களுடன் கற்றுக் கொள்ள கீழ்க்காணும் PDF ஐ தரவிரக்கம் (DOWNLOAD) செய்யவும்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)