ஃபலஸ்தீனிலும், மற்ற பகுதிகளிலும் முஸ்லிம்களை அழிப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளும்; இக்வானுல் முஸ்லிமீன்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp


بسم الله الرحمن الرحيم

அஷ் ஷெய்க் அபூ பிலால் காலித் அல் ஹள்ரமி ஹஃபிதஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

தற்பொழுது ஃபலஸ்தீனில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுடைய மிகப்பெரிய துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இந்த ஹமாஸ் அமைப்பு இருக்கின்றது. இது ஒரு பாவியான கூட்டம். இவர்களால்தான் நிரபராதியான முஸ்லிம்களுக்கு பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது.

அல்லாஹ் ஸுபஹானஹூ வதஆலா கூறுகிறான்,

وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً‌

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை. (அல்குர்ஆன் : சூரா அல் அன்ஃபால் : 8:25)

யூதர்களாகிய அவர்கள் காஃபிர்கள்; தீயவர்கள்; முஸ்லிம்கள் மீது கடும் விரோதமும், பகைமையும், வக்கிர தன்மையும் கொண்டவர்கள். இது அறியப்பட்ட விஷயம். எனினும் ஹமாஸ் என்ற இவர்கள் மார்க்க அறிவு உடையவர்களைப் போன்று வேடம் போடுகின்றார்கள். ஆனால் இவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். ஸின்தீக்குகளான ராஃபிதா ஷிஆக்களிடமிருந்து அனைத்து தீங்குகளையும் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஹமாஸ் ராஃபிதா ஷிஆவோடு கூட்டு சேர்ந்து கொண்டு நன்கு தேர்ச்சி பெறாத விஷயத்தில் மூக்கை நுழைத்ததால் நிரபராதியான முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டு என்ன ஏற்பட வேண்டுமோ அது ஏற்பட்டது. ஆமாம், அல்லாஹ்வுடைய நாட்டத்தினால் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது என்ற போதிலும் ஹமாஸ் என்ற இவர்கள் தான் அதற்கு காரணமாக இருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்திற்கு பெரிய சோதனையாக இருக்கின்றார்கள்.

அதேபோன்று இக்வானுல் முஸ்லிமீன்கள் உருவாகிய காலத்திலிருந்தே இந்த உம்மத்திற்கு பெரிய சோதனையாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த இக்வானுல் முஸ்லிமீன்களை கண்டு மக்கள் ஏமாந்து போகின்றார்கள். இவர்கள் ஊடக செய்திகளில் பொய் உரைக்கின்றார்கள். உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் காட்டுகின்றார்கள். மக்கள் இவர்களை நம்பி ஏமாறுகின்றார்கள். இந்த உம்மத்திற்கு ஏற்பட்ட ஒவ்வொரு சோதனைக்கு பின்னாலும் யார் உள்ளார்கள் என்று நாம் கவனித்தால் அங்கு இந்த இக்வானுல் முஸ்லிமீன்கள்தான் இருக்கின்றார்கள்.

ஆகவே எதிரிகள் முஸ்லிம்களை அழிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரதிநிதியாக இந்த இக்வானுல் முஸ்லிமீன்கள் இருக்கின்றார்கள். இதை அவர்கள் அறிந்திருக்கின்றார்களோ அல்லது அறியவில்லையோ ஆனால் இதுதான் உண்மை.

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்

இந்த உண்மை நிலையை அறிந்து கொள்ள பொதுமக்கள் நாடுவதில்லை.

தமிழில்: அபூ முஆது அப்துல்லாஹ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)