بسم الله الرحمن الرحيم
அஷ் ஷெய்க் அப்துல் ஹமீது அஸ் ஸுஃகரீ ஹஃபிதஹுல்லாஹ்:
இந்த கடைசி சில காலத்தில் முஸ்லிம் உம்மத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று ராஃபிதா ஷிஆவான; அல்லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய; நாத்திக ஈரான் மீது பலருக்கும் உள்ள பற்றாகும். அதிகமான ஹிஸ்பீக்கள் (இயக்கவாதிகள்) ஈரானை பிரகாசப்படுத்தி (நல்லவர்களை போன்று) காட்டுவதை நீங்கள் காண்பீர்கள். அதேபோன்று யூதர்களுடன் போரிடும் அதிகமானவர்கள் ஈரானை பிரகாசப்படுத்தி (நல்லவர்களை போன்று) காட்டுவதையும் நீங்கள் காண்பீர்கள். இவர்களுடைய தோல்விக்கு ஒருவேலை இதுவும் காரணமாக இருக்கலாம்.
ஈரானிலே அல்லாஹ்விற்கு இணை வைப்பது உள்ளது; ஈரானிலே முத்ஆ (இன்பத்திற்காக செய்யும் தற்காலிக) திருமண முறை உள்ளது; ஈரானிலே சஹாபாக்களை திட்டுவது உள்ளது; ஈரானிலே குர்ஆனை பொய்ப்படுத்துவது உள்ளது; ஈரானிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிப்பது இழிவுபடுத்துவது உள்ளது; ஈரானிலே அல்லாஹ்வின் அடியார்களுக்கு அநியாயம் செய்யப்படுவது உள்ளது; மேலும் ஈரானிலே இது போன்ற பல தீமைகள் மற்றும் பாவங்களும் உள்ளது.
சமீபத்தில் ஈராக்கிலே இந்த ராஃபிதா ஷிஆக்கள் சிறைச்சாலைகளில் முஸ்லிம்களை உயிருடன் அறுத்து பலியிடுகின்றார்கள் மேலும் படுகொலை செய்கின்றார்கள். ஈரான் இந்த முஸ்லிம் உம்மத்தை தோல்வியடைய செய்து விட்டது.
ஈரான் முஸ்லிம் உம்மத்தின் மீது விஷமிடப்பட்ட கத்தியாகும்.
யூதர்களால் நோவினை படுத்தப்படும் பல மக்கள் ஈரானை புகழ்வதையும் விரும்புவதையும் நீங்கள் காண்பீர்கள். இதுவும் யூதர்கள் முஸ்லிம் உம்மத் மீது சக்தி பெற்று ஆதிக்கம் செய்வதற்கு காரணமாகும்.
ஈரான் நிறுவப்பட்டு பிரஞ்சு மற்றும் அமெரிக்க உளவுத்துறையிலிருந்து கொமெய்னி என்பவன் ஈரானுக்கு வந்த போதுதான் யூதர்களுடைய ஆதிக்கம் முஸ்லிம்களின் மீது அதிகமானது. அதன் பிறகு இக்வானுல் முஸ்லிமீன் கொமெய்னிக்கு விசுவாசமாக பைஅத்து (உறுதிமொழி) செய்தார்கள். இதற்காக அவர்களுடைய ஃபார்ஸ் விமானம் தெஹ்ரானில் தரை இறங்கியது. (இதன் பின் தான் எதிரிகளுடைய ஆதிக்கம் முஸ்லிம்கள் மீது அதிகரித்தது)
அவர்கள் (இக்வானுல் முஸ்லிமீன்) தொடர்ந்து யமனிலே கொமெய்னியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; எகிப்தில் கொமெய்னியை இன்னும் தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; காஸாவில், லெபனானில், சிரியாவில் அவர்கள் கொமெய்னியை தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் கொமெய்னி மற்றும் அவனுடைய உதவியாளர்களின் ஆதிக்கம் முஸ்லிம்கள் மீது அதிகரித்து யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கொடுங்கோன்மையும் ஆதிக்கமும் முஸ்லிம்கள் மீது அதிகமானது.
ஆகவே, ஃபலஸ்தீனில் உள்ள முஸ்லிம்களே! மேலும் யமலில் உள்ள முஸ்லிம்களே! ஈராக்கில் உள்ள முஸ்லிம்களே! மேலும் சிரியாவில் உள்ள முஸ்லிம்களே! மேலும் லிபியாவில் உள்ள முஸ்லிம்களே! கொமைனியை விரும்புவது மற்றும் கொமைனியின் பக்கமும்; அவனுடைய சிந்தனையின் பக்கமும்; அவனை சார்ந்தவர்களின் பக்கமும் சாய்வதிலிருந்து விலகிக் கொள்ளாத வரை யூதர்களிடமிருந்தும் கிறிஸ்தவர்களிடமிருந்தும் (அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்தும்) உங்களுக்கு விடுதலை இல்லை.
ஆனால் நீங்கள் இந்த கேடு விளைவிக்கக் கூடிய கொமைனியின் சிந்தனையின் பக்கம் சாய்ந்து அதை ஆதரிப்பீர்கள் என்றால் நீங்கள் அனுபவிக்கும் இந்த இன்னல்களிலிருந்து தூரமாக முடியாது. மாறாக இதை விட அதிகமான இன்னல்களுக்கு உள்ளாக்கப்படலாம். அல்லாஹ்விடம் மட்டுமே உதவியைத் தேடுகின்றோம்.
தமிழில்: அபூ முஆது அப்துல்லாஹ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்