بسم اللــــه الرحمـــــــــن الرحيم
இரண்டாவது பதிப்பின் முன்னுரை
:مقدمة الطبعة الثانية
الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وسلم تسليماً كثيراً إلى يوم الدين، أما بعد؛
.فهذه هي الطبعة الثانية لهذا الكتاب، والذي نسأل الله أن يجعل فيه البركة، وأن ينفعنا به وينفع أبناء المسلمين به
இந்த நூலின் இரண்டாவது பதிப்பு இதுவாகும்.
இதில் அபிவிருத்தியை அல்லாஹ் ஏற்படுத்தி,
மேலும் எங்களுக்கும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளுக்கும் இதை பிரயோசனமானதாக ஆக்கவேண்டும் என்று நாம் அவனிடம் கேட்கிறோம்.
:وقمت في هذه الطبعة
இந்த பதிப்பில் நான் செய்தவை:
.أولا: بتصحيح الأخطاء المطبعية في الطبعة الأولى وهي كثيرة
முதலாவதாக: முதலாவது பதிப்பிலே இருந்த அச்சுப்பிழைகளை சரிசெய்துள்ளேன், அவை அதிகமாக இருந்தன.
.ثانيا: أضفت ما يقارب المائة سؤال زيادة على الطبعة الأولى
இரண்டாவதாக: முதலாவது பதிப்பில் இருப்பதற்கு அதிகமாக கிட்டத்தட்ட நூறு கேள்விகளை இதில் சேர்த்துள்ளேன்.
ثالثا: قمت ببعض التعديلات في بعض الأسئلة، وحذف ما تكرر منها، وإضافة الملاحظات التي أفادني بها من اطلع على هذا الكتاب، وعلى رأسهم
شيخنا العلامة المحدث الناصح الأمين أبي عبد الرحمن يحيى بن علي الحجوري حفظه الله ورعاه وزاده من علمه وتقواه ونفع به الإسلام والمسلمين.
.وكذلك الشيخ الفاضل أبي عبد الرحمن جميل الصلوي حفظه الله ورعاه وغيرهم ممن أتحفنا بملاحظاته نسأل الله أن يبارك فيهم جميعاً
மூன்றாவதாக: சில கேள்விகளில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளேன், மேலும் திரும்பத்திரும்ப வந்தவைகளை நீக்கியுள்ளேன்.
மேலும் இந்தப் புத்தகத்தை மேற்பார்வையிட்டவர்கள் எனக்கு குறிப்பிட்ட குறிப்புக்களை நான் சேர்த்துள்ளேன், அதில் குறிப்பாக எங்களுடைய ஷெய்க் அல்-முஹத்திஸ் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரி ஹபிளஹுல்லாஹ், அதே போன்றுதான் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் ஜமீல் அஸ்-ஸில்வீ ஹபிளஹுல்லாஹ் மேலும் இவர்கள் அல்லாத தங்களுடைய குறிப்புகளை தந்துதவிய அனைவருக்கும் அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
:رابعا: ذكرت الأدلة من الكتاب والسنة على جميع الأسئلة وسيكون في كتاب مستقل بعنوان
.”الاستدلال على كنز الأطفال” وسيخرج قريباً إن شاء الله
நான்காவதாக: அனைத்து கேள்விகளுக்கும் அல்-குர்ஆனில் இருந்தும் ஸுன்னாவில் இருந்தும் ஆதாரங்களை தொகுத்துள்ளேன் “கன்ஸுல் அத்பாலுக்கான ஆதாரம்கானல்” என்ற தலைப்பில் ஒரு தனி நூலாக இன்ஷா அல்லாஹ் விரைவில் அது வெளிவரும்.
وفي الختام فإن التقصير، والنقصان من شأن يني آدم، والكمال لله وحده، فمن وجد خطئًا، أو أراد أن يدلني بفائدة، أو ملاحظة، فليكتبها مشكورًا، ويرسلها على هذا الرقم [٧٧٧١٧٧١٩١] والقصد هو نفع أبناء والمسلمين
இறுதியாக: குறைபாடு நிகழ்வது ஆதமுடைய மகனின் இயழ்பாகும் பரிபூரணமானது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது, எனவே இதில் ஒரு தவறை எவராவது கண்டால், அல்லது பயனுல்ல ஒன்றை அல்லது குறிப்பை சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பினால் தயவுசெய்து 777177191 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கு அதை எழுதி அனுப்பு வைக்கவும்
.نسأل الله أن يجعل أعمالنا خالصة لوجهه الكريم، وأن يجعل ذلك من خير ما يدخر لنا عنده انه جواد كريم
எங்களுடைய செயல்களை அவனுடைய முகத்திற்காக மாத்திரம் ஆக்கவேண்டும் என்றும்; மேலும் அவனிடம் எங்களுக்காக வேண்டி அவன் சேமித்து வைத்திருக்கக் கூடிய சிறந்தவைகளில் ஒன்றாக அதை ஆக்க வேண்டும் என்றும் நாம் அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம்.
நிச்சயமாக அவன் வாரி வழங்குபவன் கொடையாளன்.
كتبه: الدكتور فيصل بن مسفر بن معوض الزنامي الوادعي
எழுதியவர்: பைஸல் இப்னு மிஸ்ஃபிர் இப்னி மஅவ்லி அஸ்-ஸினாமீ அல்-வாதிஈ.
தமிழில்: ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
ஹிஜ்ரி 1447 ரபீஃஉல் அவ்வல் 16
2025/09/9.
Telegram channel:
https://t.me/kanzulatfaltamil
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Vb6Zw4JGk1Fp8D0LMy1n
Facebook:
https://www.facebook.com/share/19mJ8aZpMq/
Instagram:
https://www.instagram.com/kanzulatfal?igsh=MTR0cHJxYno1aHR0dA==
X:
https://x.com/KanzulT62642?t=Y8BD7kTEIb3uQ9WU1J44oQ&s=08
YouTube:
https://youtube.com/@kanzulatfaltamil?si=2SBmBm-zRlsfU5mu
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.