بسم اللــــه الرحمـــــــــن الرحيم
كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ
தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்
بَابُ الإِيْمَانِ، وَمَرَاتِبُ الدِّيْن
ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய பிரிவு
கேள்வி / பதில்
س (١١) كَمْ أَرْكَانُ الْإِسْلَامِ؟
:ج (١١) خَمْسَةٌ، هِيَ
.شَهَادَةُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
.وَإِقَام الصَّلَاةِ
.وَإِيتَاء الزَّكَاةِ
.وَصَوْم رَمَضَانَ
.وَحَجّ الْبَيْتِ لِمَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
11 – இஸ்லாத்தின் தூண்கள் எத்தனை?
இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து. அவை:
1. உண்மையாக வணங்கி வழிபடத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இன்னும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராகவும் இருக்கின்றார் என்று சாட்சியம் சொல்லல்.
2. தொழுகையை நிலை நாட்டுதல்.
3. ஸகாத்தைக் கொடுத்தல்.
4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்.
5. அல்லாஹ்வின் வீட்டுக்குச் சென்று வர சக்தி பெற்றவர் ஹஜ் செய்தல்.
[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 8, ஸஹீஹ் முஸ்லிம்: 16]
س (١٢) مَا هُوَ الدِّينُ الَّذِي لَا يَقْبَلُ اللَّهُ غَيْرَهُ؟
.ج (١٢) هُوَ: الْإِسْلَامُ
12 – அல்லாஹ் அதைத் தவிர வேறு எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; அந்த மார்க்கம் என்ன?
அது இஸ்லாம் மார்க்கம் ஆகும்.
[ஆதாரம்: சூரா ஆலு இம்ரான் 3: 85]
س (١٣) عَلَى أَيِّ مِلَّةٍ يُولَدُ الْمَوْلُودُ؟
.ج (١٣) عَلَى مِلَّةِ الْإِسْلَامِ
13 – ஒவ்வொரு குழந்தையும் எந்த மார்க்கத்தின் மீது பிறக்கின்றன?
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் மார்க்கத்தின் மீது பிறக்கின்றன.
[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 1385, ஸஹீஹ் முஸ்லிம்: 2658]
س (١٤) اذْكُرْ أَرْبَعًا مِنْ مِلَلِ الْكُفْرِ؟
.ج (١٤) اليَهُودِيَّةُ، النَّصْرَانِيَّةُ، الصَّابِئَةُ، المَجُوسِيَّةُ
14 – நிராகரிப்பில் உள்ள நான்கு வெவ்வேறு மதங்களைக் குறிப்பிடுக?
1. யூத மதம்.
2. கிறிஸ்தவ மதம்.
3. அஸ்ஸாபிஆஹ் மதம்.
4. மஜூஸ் (நெறுப்பு வணங்கிகள்) மதம்.
[ஆதாரம்: சூரா அல் ஹஜ்: 22: 17]
س (١٥) هَلِ الْيَهُودُ وَالنَّصَارَى رَاضُونَ عَنِ الْمُسْلِمِينَ؟
:ج (١٥) لاَ، قال تعالى
{وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡیَهُودُ وَلَا ٱلنَّصَـٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰ}
15 – யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களைக் கொண்டு திருப்தி அடையக் கூடியவர்களா?
இல்லை.
உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான் :
[(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) “அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)” எனக் கூறிவிடுங்கள்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் பகரா 2: 120]
இன்ஷா-அல்லாஹ்! தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.