குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 21-25 kanz-ul-Atfal Tamil Q – 21 – 25

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ

தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்

بَابُ الإِيْمَانِ، وَمَرَاتِبُ الدِّيْن

ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய பிரிவு

கேள்வி / பதில்

س (٢١) مَا عَقِيدَتُكَ؟

.ج (٢١) سُنِّيٌّ سَلَفِيٌّ

21 – உன்னுடைய கொள்கைக் கோட்பாடு என்ன?

நான் சுன்னியாகவும், (அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவை சரியான முறையில் பின்பற்றுபவன்) ஸலபி (அல்-குர்ஆன், அஸ்ஸுன்னாவை ஸலபுஸ்ஸாலிஹீன்கள் விளக்கத்தின் அடிப்படையில் விளங்குபவன்) ஆகவும் இருக்கின்றேன்.

[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அந் நிஸா 4: 115. முஸ்னத் அஹ்மத்: 17142, அபூ தாவூத்: 4607]


س (٢٢) مَا هِيَ الْجَاهِلِيَّةُ؟

.ج (٢٢) هِيَ كُلُّ مَا خَالَفَ الْكِتَابَ وَالسُّنَّةَ

22 – ஜாஹிலிய்யாஹ் (அறியாமை) என்றால் என்ன?

அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவுக்கு முரணான அனைத்தும் ஜாஹிலிய்யா ஆகும்.

[ஆதாரம்: அல் குர்ஆன் சூரா அல் மாயிதா 5: 50 ஸஹீஹுல் புகாரி: 30, 3834, ஸஹீஹ் முஸ்லிம்: 1661]


س (٢٣) مَا أَوَّلُ عُرْوَةٍ مِنْ عُرَى الْإِسْلَامِ تُنْقَضُ؟ وَمَا آخِرُهُنَّ؟

.ج (٢٣) أَوَّلُهُنَّ نَقْضًا: الْحُكْمُ، وَآخِرُهُنَّ نَقْضًا: الصَّلَاةُ

23 – இஸ்லாத்துடைய முடிச்சுகளில் இருந்து முதலாவது முறிக்கப்படும் முடிச்சு என்ன? மேலும் இறுயானது என்ன?

அவற்றில் முதலாவது முறிக்கப்படுவது; அல்லாஹ்வின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமல் இருப்பதும்; இறுதியாக முறிக்கப்படுவது, தொழுகையை விட்டு நீங்குவதும் ஆகும்.

[ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்: 22160]


س (٢٤) مَا هُوَ الْإِحْسَانُ؟

.ج (٢٤) أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ

24 – இஹ்ஸான் என்றால் என்ன?

இஹ்ஸான் என்றால் நீ அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று வணங்குவது ஆகும்; நீ அவனைப் பார்க்காவிட்டாலும், அவன் நிச்சயமாக உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

[ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 08]


:س (٢٥) فِي أَيِّ سُورَةٍ قَوْلُهُ تَعَالَى
إِنَّ اللَّهَ يَأمُرُ بِالعَدلِ وَالإِحسانِ وَإيتاءِ ذِي القُربى وَيَنهى عَنِ الفَحشاءِ وَالمُنكَرِ وَالبَغيِ يَعِظُكُم لَعَلَّكُم تَذَكَّرونَ﴾ ؟﴿

25 – உயர்ந்தவனாகிய அல்லாஹுத் தஆலாவின் கூற்று எந்த சூராவிலே இடம்பெறுகின்றது?

[(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவைகளை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.

சூரா அந்நஹ்லிலே இடம் பெறுகிறது.


குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 16-20 kanz-ul-Atfal Tamil Q – 16 – 20 – Salaficall

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)