குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 26 – 30 kanz-ul-Atfal Tamil Q&A – 26-30

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ

தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்

فَصْلٌ الإِيْمَانُ بِاللّٰهِ تَعَالَى

அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது பற்றிய பிரிவு.

கேள்வி / பதில்

س (٢٦) مَا هُوَ الإِيمَانُ؟

.ج (٢٦) قَوْلٌ بِاللِّسَانِ، وَاعْتِقَادٌ بِالْقَلْبِ، وَعَمَلٌ بِالْجَوَارِحِ، يَزِيدُ بِالطَّاعَةِ، وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ

26 – ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் நாவினால் மொழிவது; உள்ளத்தால் உறுதி கொள்வது; உடல் உறுப்புகளால் அமல் செய்வது ஆகும். மேலும் வழிபடுவதன் மூலமாக அது அதிகரிக்கின்றது; மாறு செய்வதின் மூலமாக அது குறைகின்றது.

[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா 5: 23
ஸஹீஹுல் புகாரி: 9, ஸஹீஹ் முஸ்லிம்: 35]


س (٢٧) كَمْ أَرْكَانُ الإِيمَانِ؟

:ج (٢٧) سِتَّةٌ

27 – ஈமானின் தூண்கள் எத்தனை?

ஈமானின் தூண்கள் ஆறு. அவை:

1. அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளல்.


2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை)க் கொண்டு ஈமான் கொள்ளல்.


3. அவனுடைய வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்ளல்.


4. அவனுடைய தூதர்களைக் கொண்டு ஈமான் கொள்ளல்.


5. இறுதி நாளைக் கொண்டு ஈமான் கொள்ளல்.


6. கத்ர் (விதி) அதனுடைய நல்லதையும் இன்னும் கெட்டதையும் கொண்டு ஈமான் கொள்ளல்.

[ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 8]


س (٢٨) هَلِ الإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ؟

.ج (٢٨) نَعَمْ؛ يَزِيدُ بِالطَّاعَةِ، وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ

28 – ஈமான் கூடிக் குறைய கூடியதா?

ஆம், வழிபாட்டைக் கொண்டு அதிகரிக்கின்றது. இன்னும் பாவத்தைக் கொண்டு குறைகின்றது.

[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் அன்பால்: 8: 2, சூரா அத் தவ்பா: 9: 124]


س (٢٩) كَمْ شُعَبُ الإِيمَانِ؟

ج (٢٩) بِضْعٌ وَسِتُّونَ، أَوْ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً

29 – ஈமானுடைய கிளைகள் எத்தனை?

ஈமான் அறுபதுக்கு மேற்பட்ட அல்லது எழுபதுக்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டது.

[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 09, ஸஹீஹ் முஸ்லிம்: 35]


س (٣٠) مَا أَعْلَى شُعَبِ الإِيمَانِ؟

.ج (٣٠) أَعْلَاهَا قَوْلُ: (لَا إِلٰهَ إِلَّا اللَّهُ)

30 – ஈமானுடைய கிளைகளில் மிக உயர்ந்தது எது?

ஈமானுடைய கிளைகளில் மிக உயர்ந்தது; “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற கூற்று ஆகும்.
பொருள்: (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாருமில்லை).

[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 09, ஸஹீஹ் முஸ்லிம்: 35]


குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 21-25 kanz-ul-Atfal Tamil Q – 21 – 25 – Salaficall

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)