بسم اللــــه الرحمـــــــــن الرحيم
كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ
தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்
فَصْلٌ الإِيْمَانُ بِاللّٰهِ تَعَالَى
அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது பற்றிய பிரிவு.
கேள்வி / பதில்
س (٣١) مَا أَدْنَى شُعَبِ الإيمانِ؟
.ج (٣١) أَدْنَاهَا: إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ
31 – ஈமானுடைய கிளைகளில் மிகத் தாழ்ந்தது எது?
ஈமானுடைய கிளைகளில் மிகத் தாழ்ந்தது; பாதையில் இருக்கும் தீங்கை அகற்றுவதாகும்.
[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 09, ஸஹீஹ் முஸ்லிம்: 35]
س (٣٢) اذْكُرْ بَعْضَ شُعَبِ الإِيمَانِ؟
ج (٣٢) الإِيمَانُ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ، وَإِقَامُ الصَّلَاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ، وَالْحَجُّ، وَالْجِهَادُ، وَالْعَدْلُ، وَبِرُّ الْوَالِدَيْنِ، وَصِلَةُ الرَّحِمِ، وَالصِّدْقُ، وَالصَّبْرُ، وَالأَمَانَةُ، وَطَلَبُ الْعِلْمِ، وَأَكْلُ الْحَلَالِ، وَالْحَيَاءُ، وَإِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ
32 – ஈமானுடைய கிளைகளில் சிலவற்றை குறிப்பிடுக?
❁ அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ அவனுடைய மலக்குகளை (வானவர்களை)க் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ அவனுடைய வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ அவனுடைய தூதர்களைக் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ இறுதி நாளைக் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ கத்ர் (விதி) அதனுடைய நல்லதையும் இன்னும் கெட்டதையும் கொண்டு ஈமான் கொள்ளல்.
❁ தொழுகையை நிலை நாட்டல்.
❁ ஸகாத்தைக் கொடுத்தல்.
❁ ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்.
❁ ஹஜ் செய்தல்.
❁ அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்தல்.
❁ நீதம் செலுத்துதல்.
❁ பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்தல்.
❁ குடும்ப உறவுகளோடு சேர்ந்து நடத்தல்.
❁ உண்மை பேசுதல்.
❁ பொறுமையாக இருத்தல்.
❁ அமானிதம் பேணுதல்.
❁ அறிவைத் தேடுதல்.
❁ ஹலாலான (ஆகுமான) உணவை உண்ணுதல்.
❁ வெட்கப்படுதல்.
❁ பாதையில் காணப்படும் தீமையை அகற்றுதல் – இவை அனைத்தும் ஈமானின் சில கிளைகளாகும்.
[ஆதாரம்: சூரா அந் நஹ்ல் 16: 90, சூரா அந் நிஸா 4: 85, சூரா அல் பகரா 2: 168
ஸஹீஹுல் புகாரி:.87, ஸஹீஹ் முஸ்லிம்: 17, ஸஹீஹ் முஸ்லிம்: 2699]
س (٣٣) مَا هِيَ أَوْثَقُ عُرَى الإِيمَانِ؟
.ج (٣٣) الحُبُّ فِي اللهِ، وَالبُغْضُ فِي اللهِ، وَالمُوَالاةُ فِي اللهِ، وَالمُعَادَاةُ فِي اللهِ
33 – ஈமானுடைய முடிச்சுகளில் மிக வழுவானவை என்ன?
அல்லாஹ்விற்காகவே நேசித்தல்; அல்லாஹ்விற்காகவே விரோதித்தல். மேலும் அல்லாஹ்விற்காகவே தோழமை கொள்ளல்; அல்லாஹ்விற்காகவே பகைமை கொள்ளல்.
[ஆதாரம்: அல் முஃஜமுல் கபீர் லித் தபரானீ:11537]
س (٣٤) أَيُّهُما أَحَبُّ إِلى اللَّهِ الْمُؤْمِنُ الضَّعيفُ أَمِ الْقَوِيُّ؟
.ج (٣٤) الْمُؤْمِنُ الْقَوِيُّ أَحَبُّ إِلَى اللَّهِ
34 – பலவீனமான முஃமின் அல்லது பலமான முஃமின் இவர்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்கு உரியவர் யார்?
பலமான முஃமின் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்கு உரியவர் ஆவார்.
[ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 2664]
س (٣٥) مَا هُوَ أَوَّلُ وَاجِبٍ عَلَى الْعَبِيدِ؟
.ج (٣٥) تَوْحِيدُ اللهِ تَعَالَى
35 – ஒவ்வொரு அடியார்களின் மீதும் உள்ள முதல் கடமை என்ன?
தவ்ஹீத் – அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்கு தகுதியானவன் என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.
[ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 7372, ஸஹீஹ் முஸ்லிம்: 19]
இன்ஷா-அல்லாஹ்! தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

