بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ
இன்னும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், உம்முடைய பொறுமை அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை, (16. ஸூரத்துந் நஹ்ல்: 127)
இந்த உலக விஷயங்களாக இருந்தாலும்; இறுதி நாளுக்குறிய மேலான குறிக்கோள்களாக இருந்தாலும்; அல்லது எதுவாக இருந்தாலும் பொறுமை இல்லாமல் அடைய முடியாது. நிச்சயமாக பொறுமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
நாம் ஏன் பொறுமை சாலிகளாக இருக்க வேண்டும்?
எந்த அம்சங்களில் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை உலமாக்கள் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளார்கள்?
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வுடைய கட்டளைகளை செயல்படுத்தும் போதும்; தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து கொள்ளும் போதும்; கஷ்டங்கள் மற்றும் சோதனைகளின் போதும் பொறுமையை கடைப்பிடித்தல் பற்றிய பாடத்தை கற்றுக் கொள்வோம்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

