بسم الله الرحمن الرحيم
அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது.
எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்கள்:
எங்களுடைய பாவங்களை நீக்கி பாவ மன்னிப்பு பெற்றுத்தரக்கூடிய மிக அடிப்படையான முதலாவது பரிகாரம்; தவ்ஹீதை எங்களுடைய உள்ளங்களில் நிலைநாட்டுவது ஆகும்.
எங்களுடைய பாவங்களை நீக்கி பாவ மன்னிப்பு பெற்றுத்தரக்கூடிய இரண்டாவது பரிகாரம்; உண்மையான தவ்பாக்களைச் செய்வது ஆகும்.
எங்களைப் பாவங்களில் இருந்து பாதுகாத்து; பாவ மன்னிப்பு பெற்றுத்தரக்கூடிய மூன்றாவது பரிகாரம்; அல்லாஹ்விடத்தில் இஸ்திஃபார் செய்வது ஆகும்.
எங்களைப் பாவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நான்காவது பரிகாரம்; பெரும் பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது ஆகும்.
எங்களைப் பாவமான தீய செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஐந்தாவது பரிகாரம்; தொழுகைகளை பேணித் தொழுது; அதை நிலைநாட்டுவது ஆகும்.
எங்களுடைய பாவங்களை நீக்க்கித் தரக்கூடிய மேலும் பாவ மன்னிப்பை பெற்றுத்தரக்கூடிய ஆறாவது பரிகாரம்: பரிபூரணமான வுழுவை செய்வது ஆகும்.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் எவ்வாறு பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது? அதற்கான ஆதாரங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய ஆத்மாக்களையும் எங்களுடைய உறுப்புக்களையும் எங்களுடை பாவங்களை விட்டும் சுத்தப் படுத்திக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.