بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
அல்லாஹ் ஓர் ஊரை உதாரணமாகக் கூறுகிறான், அது அச்சமற்றதாக அமைதியானதாக இருந்தது, அதற்குரிய உணவு (வகைகள்) ஒவ்வொரு திசையிலிருந்தும் அதற்கு தாராளமாக வந்து கொண்டுமிருந்தது, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) அ(வ்வூரான)து மாறு செய்தது, ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி பயம் என்னும் ஆடையை அதற்கு (அணிவித்து அவ்வூரார்களை)ச் சுவைக்கச் செய்தான். (ஸூரத்துந் நஹ்ல்:112)
பேரழிவுகள், சோதனைகள் ஆரம்பகாலங்களிலும் ஏற்பட்டிருக்கின்றனவா? ஏன் அவைகள் ஏற்பட்டன?
இன்றைய உலகத்தில் பேரழிவுகளும், சோதனைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன; அதற்கான காரணம் என்ன?
இவ்வாறான பேரழிவுகள், சோதனைகளின் போது; அதில் நல்லவர்களும் உள்வாங்கப்படுவார்களா?
இவ்வாறான பேரழிவுகள், சோதனைகளில் இருந்து எவ்வாறு நாம் மீட்சி பெறுவது?
பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூராவளி, மழைவெள்ளம், பேரழிவுகள், சுனாமி போன்றவைகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணம் என்ன?
பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் இயற்கையின் ஒரு விளையாட்டா?
ஒரு பிரதேசத்தார்கள் இவ்வாறான பேரழிவுகள் மற்றும் சோதனைகளுக்கு ஆளானார்கள் என்றால்; அவர்களுக்கு ஏனையவர்கள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன?
இன்ஷா-அல்லாஹ் மேற்கூறப்பட்ட விடயங்களை ஆதாரங்களுடன் அறிந்துகொள்ள கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

