﷽
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
❖ இஸ்லாத்தில் ஐந்தாவது தூண் ஸகாத்.
❖ ஸகாத்தை மறுப்பவன் காபிர்.
❖ மக்கள் ஸகாத்தை கொடுத்து நிலைநாட்டும் வரையில் போரிடுமாறு நபியவர்கள் அல்லாஹ்வால் ஏவப்பட்டுள்ளார்.
❖ ஸகாத் கொடுக்காதவர்களை அல்லாஹ் திட்டுகிறான்.
❖ ஸகாத்தை கொடுக்கும் ஈமானை உடையவர்களின் பண்பு.
❖ ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்வது நரகவாசிகளின் பண்பு.
❖ ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்வது கப்ரு வேதனைக்கு காரணமாகும்.
❖ ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்பவனின் பணம் மறுமை நாளில் ஒரு பாம்பாக வரும்.
❖ ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்பவர்களை நபி ﷺ அவர்கள் சபித்தார்கள்.
❖ ஸகாத் கொடுப்பதால் செல்வத்தில்; அது குறைபாட்டை ஏற்படுத்தாது.
❖ ஸகாத் அபிவிருத்தியை ஏற்படுத்தி சுத்தப்படுத்தும்.
❖ ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்ளும் சமூகத்திற்கு அல்லாஹ்வின் தண்டனை உலகத்திலே ஆரம்பிக்கும்.
❖ ஸகாத் கொடுப்பது ஆண் மக்களின் ஒரு பண்பு.
❖ அல்லாஹ்வின் அருட்கொடைகளைக் கொண்டு ஆகிரத்தை அடைந்து கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து ஸகாத்தின் முக்கியத்துவத்தையும் அதனை கொடுக்காமல் தடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்களையும் ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

