بسم اللــــه الرحمـــــــــن الرحيم
مقدمة الطبعة الثالثة
மூன்றாவது பதிப்பின் முன்னுரை
الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وسلم تسليماً كثيراً إلى يوم الدين، أما بعد؛
فبحمد الله تعالى أصبح كتاب كنز الأطفال يدرس في كثير من المراكز والمساجد ويستفيد منه أولاد المسلمين بل وكبارهم والفضل في ذلك لله سبحانه فله الحمد أولاً وآخراً.
அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள். இது விஷயத்தில் எல்லா நன்றிகளும் அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் புகழ் அனைத்தும் ஆரம்பமாகவும் இறுதியாகவும் அவனுக்கே உரியது.
:وهذه هي الطبعة الثالثة من الكنز وقد تميزت عن سابقتها بأمور
கன்ஸுல் அத்பால் என்ற நூலின் மூன்றாவது பதிப்பு இதுவாகும். இது அதனுடைய முந்தைய பதிப்புக்களை விட சில விஷயங்களில் வேறுபடுகிறது:
إضافة أسئلة جديدة في جميع الأبواب
அனைத்துப் பிரிவுகளிலும் புதிய கேள்விகளை சேர்த்துள்ளேன்.
إضافة أسئلة كثيرة حول آيات من كتاب الله في أي سورة شحذاً للهمم لحفظ كتاب الله وإتقانه ووضعتها في أماكن متفرقة من الكنز بما يناسب معنى الأسئلة من سياق الأسئلة
அல்லாஹ்வுடைய புத்தகத்தை மனனம் செய்ய வேண்டும், மேலும் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை தூண்டும் முகமாக அல்லாஹ்வுடைய புத்தகத்தில் இருந்து குர்ஆனிய வசனங்களை எடுத்து அது எந்த சூராவில் வருகிறது என்று அதிகமான கேள்விகளை சேர்ப்பதோடு, அந்த வசனங்களை கேள்விபதில்களின் நடைக்கேற்ப கேள்விகளுடைய கருத்துக்கு பொருந்தக்கூடிய விதத்தில் கன்ஸுல் அத்பாலில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளேன்.
.إضافة باب في التجويد
தஜ்வீத் பற்றிய ஒரு பிரிவை சேர்த்துள்ளேன்.
.إضافة باب في اللغة العربية والنحو
அரபு மொழி, மற்றும் அரபு இலக்கணம் பற்றிய ஒரு பிரிவை சேர்த்துள்ளேன்.
إضافة باب في آثار كثيرة من آثار السلف من قائلها؟
ஸலபுகளுடைய அடிச்சுவடுகளில் இருந்து அதிகமான அடிச்சுவடுகள்; அந்தக்கூற்று எவருடைய கூற்று என்பது பற்றிய ஒரு பிரிவை சேர்த்துள்ளேன்.
.إعادة ترتيب الأبواب
எல்லாப் பிரிவுகளையும் மறுசீரமைத்துள்ளேன்.
.وقد أصبح عدد الأسئلة يزيد على الألف والخمسمائة ولله الحمد
தற்போது கேள்விகளின் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
.فنسأل الله أن ينفع بها وأن يجعل أعمالنا خالصة لوجهه الكريم، والحمد لله رب العالمين
அல்லாஹ் அதைக் கொண்டு பிரயோசனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம். மேலும் எங்களுடைய செயல்களை அவனுடைய முகத்திற்காக மாத்திரம் ஆக்கவேண்டும் என்றும் கேட்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அகிலத்தார் அனைவரையுடைய இறைவன் அவனே.
Telegram channel:
https://t.me/kanzulatfaltamil
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Vb6Zw4JGk1Fp8D0LMy1n
Facebook:
https://www.facebook.com/share/19mJ8aZpMq/
Instagram:
https://www.instagram.com/kanzulatfal?igsh=MTR0cHJxYno1aHR0dA==
X:
https://x.com/KanzulT62642?t=Y8BD7kTEIb3uQ9WU1J44oQ&s=08
YouTube:
https://youtube.com/@kanzulatfaltamil?si=2SBmBm-zRlsfU5mu
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.
Previous – முன்னுரை 02: குழந்தைகளின் பொக்கிஷம் முன்னுரை – 02 – கன்ஸ்-உல்-அத்பால் – Salaficall

