بسم اللــــه الرحمـــــــــن الرحيم
كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ – بَابُ الإِيْمَانِ، وَمَرَاتِبُ الدِّيْن
தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்
ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய பிரிவு
س (١): مَا هِيَ مَراتِبُ الدِّيْنِ؟
.ج (١): ثَلاثٌ: الإِسْلَامُ، وَالإيمْانُ، وَالإحْسَانُ
கேள்வி / பதில்
01 – மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை?
மார்க்கத்தின் படித்தரங்கள் மூன்று:
1 – இஸ்லாம்
2 – ஈமான்
3 – இஹ்ஸான்.
[ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 08]
س (٢) مَا هِيَ الأَرْبَعُ المَسَائِل التِّيْ يَجِبُ عَلَيْنَا تَعَلُّمُهَا؟
.ج (٢) الأُوْلَى: اَلْعِلْمُ، وَالثَّانِيَةُ: اَلْعَمَلُ بِهِ، وَالثَّالِثَةُ: الدَّعْوَةُ إِلَيْهِ، وَالرَّابِعَةُ: الصَّبْرُ عَلَى الأَذَى فِيهِ
02 – நாம் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய நான்கு விஷயங்கள் எவை?
1 – அறிவு
2 – அந்த அறிவைக் கொண்டு செயல்படுதல்
3 – அதன்பால் அழைத்தல்
4 – அதனால் ஏற்படும் நோவினைகளின் போது பொறுமையாக இருத்தல்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா முஹம்மத்:19, சூரா அல் அஸ்ர்: 1-3]
س (٣) مَا هِي الأُصُولُ الثَّلاثَةُ التَّي يَجِبُ عَلَى المُسْلِمِ مَعْرِفَتُهَا؟
.ج (٣) مَعْرِفَةُ اللّٰه، وَمَعْرِفَةُ نَبِيِّهِ، وَمَعْرِفَةُ دِينِ الإسْلامِ، وَهِيَ الأَسْئِلَةُ الثَّلاَثَة التِّيْ يُسْأُل عَنْهَا الإِنْسَانُ فِيْ قَبْرِهِ
03 – ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் என்ன?
1 – அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளல்.
2 – அவனுடைய நபியைப் பற்றி அறிந்து கொள்ளல்.
3 – இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளல்.
மேலும் இவைகள் ஒவ்வொரு மனிதனின் கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகளாகும்.
[ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்: 18534]
س (٤) مَنْ رَبُكَ؟
.ج (٤) رَبِّي اللّٰه
04 – உன்னுடைய இறைவன் யார்?
என்னுடைய இறைவன் அல்லாஹ்.
[ஆதாரம்: அல்-குர்ஆன் சூரா அல்-ஃபாதிஹா: 2, சூரா அல்-அன்ஆம்: 164]
س (٥) مَنْ نَبِيُّكَ؟
.ج (٥) نَبِيِّي مُحْمَدٌ ﷺ
05 – உன்னுடைய நபி யார்?
என்னுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல்-அஹ்ஸாப்: 40]
இன்ஷா-அல்லாஹ்! தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

