குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 06-10 kanz-ul-Atfal Tamil Q – 6 – 10

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ

தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்

بَابُ الإِيْمَانِ، وَمَرَاتِبُ الدِّيْن

கேள்வி / பதில்

س (٦) مَا دِينُكَ؟

.ج (٦) دِينِي الإسْلامُ

06 – உன்னுடைய மார்க்கம் என்ன?

என்னுடைய மார்க்கம் இஸ்லாம்.

[ஆதாரம்: அல்-குர்ஆன்: சூரா ஆலு இம்ரான் 3: 19]


س (٧) مَنْ خَلَقَكَ؟

.ج (٧) الله خَلَقَني وَخَلَقَ جَمِيْعَ المَخْلُوْقَاتِ

07 – உன்னைப் படைத்தவன் யார்?

என்னைப் படைத்தவன் அல்லாஹ். மேலும் அனைத்துப் படைப்புக்களையும் படைத்தவனும் அல்லாஹ்.

[ஆதாரம்: அல்-குர்ஆன்: சூரா அஸ்- ஸுமர், 39: 62]


س07 – (٨) لِمَاذا خَلَقَنَا الله؟

.ج (٨) خَلَقَنَا لـِعِبادَتِهِ

08 – அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்தான்?

அவனை மாத்திரம் வணங்குவதற்காக அவன் எங்களைப் படைத்தான்.

[ஆதாரம்: அல்-குர்ஆன்: சூரா அஜ்-ஜாரியாத்: 51: 56]


س (٩) ما هي العِبادَةُ؟

.ج (٩) اسمٌ جَامِعٌ لـِكُلِّ مَا يُحِبُهُ الله وَيَرْضاهُ مِن: الأقْوَالِ والأعمالِ الظَّاهِرَةِ والبَاطِنَةِ

09 – இபாதத் (வணக்கம்) என்றால் என்ன?

அல்லாஹ் விரும்பக்கூடிய இன்னும் பொறுந்திக் கொள்ளக்கூடிய வெளிரங்கமான மற்றும் உள்ரங்கமான சொல் செயல் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பெயர்ச் சொல் ஆகும்.

[நூல்: كتاب العبودية: 44]


س (١٠) مَا هُوَ الإِسْلاَمُ ؟

.ج (١٠) هُوَ: الاِسْتِسْلاَمُ لِلّٰهِ بـ: التَّوْحِيْدِ، وَالانْقِيَادُ لَهُ بِـالطَّاعَةِ، وَالْخُلُوْصُ وَالْبَرَاءَةُ مِنَ الشِّرْكِ وَأَهْلِهِ

10 – இஸ்லாம் என்றால் என்ன?

ஏகத்துவத்துவத்தைக் கொண்டு அல்லாஹ்வுக்கு சரணடைவதும்; மேலும் வழிப்படுவதில் அவனுக்கு கட்டுப்படுவதும்; இன்னும் நிரகரிப்பிலிருந்தும், நிராகரிப்பவர்களிலிருந்தும் நீங்கித் தூரமாகி இருப்பதே இஸ்லாமாகும்.

[ஆதாரம்: சூரா அல் ஹஜ் 22: 34, சூரா லுக்மான் 31: 22, சூரா அல் பகரா: 2: 256]


குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 01- 05 kanz-ul-Atfal Tamil Q – 1 – 5 – Salaficall

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)