بسم اللــــه الرحمـــــــــن الرحيم
كِتَابُ التَّوحِيدِ وَالعَقِيدَةِ
தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம்
بَابُ الإِيْمَانِ، وَمَرَاتِبُ الدِّيْن
ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய பிரிவு
கேள்வி / பதில்
س (١٦) مَنْ هُمْ شَرُّ الْبَرِيَّةِ، وَمَنْ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ؟
.ج (١٦) شَرُّ الْبَرِيَّةِ: الْكُفَّارُ، وَخَيْرُ الْبَرِيَّةِ: الْمُؤْمِنُونَ
16 – படைப்புகளில் மிக கெட்டவர்கள் யார்? இன்னும் படைப்புகளில் மிக நல்லவர்கள் யார்?
படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் நிராகரிப்பாளர்கள். இன்னும் படைப்புகளில் மிக நல்லவர்கள் விசுவாசிகள் (இறை நம்பிக்கையாளர்கள்).
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் பய்யினா, 98: 6-8]
س (١٧) هَلِ الْكَافِرُ يَعِيشُ فِي حَيَاةٍ طَيِّبَةٍ؟
.ج (١٧) لاَ
17 – இறை நிராகரிப்பாளன் நல்ல வாழ்க்கை வாழ்கின்றானா?
இல்லை.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா தாஹா, 20: 124]
س (١٨) مَنْ هُمْ أَهْلُ الْكِتَابِ؟
.ج (١٨) هُمُ: الْيَهُودُ وَالنَّصَارَى
18 – வேதங் கொடுக்கப்பட்டவர்கள் யார்?
அவர்கள்: யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் பகரா, 2: 113, சூரா அல் மாயிதா, 5: 68]
س (١٩) هَلْ دِينُ الْإِسْلَامِ كَامِلٌ أَمْ يَحْتَاجُ إِلَى تَكْمِيلٍ؟
.ج (١٩) دِينُ الْإِسْلَامِ كَامِلٌ
19 – இஸ்லாம் பூரணமான ஒரு மார்க்கமா? அல்லது பூரணத்துவத்தின் பக்கம் அது தேவை காணுகின்றதா?
இஸ்லாம் பூரணமான ஒரு மார்க்கம் ஆகும்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா 5: 3]
س (٢٠) مِنْ أَيْنَ يَأْخُذُ الْمُسْلِمُ دِينَهُ؟
.ج (٢٠) مِنَ الْكِتَابِ وَالسُّنَّةِ
20 – ஒரு முஸ்லிம் அவருடைய மார்க்கத்தை எங்கிருந்து எடுக்க வேண்டும்?
அல்லாஹ்வுடைய புத்தகமான அல்-குர்ஆனிலிருந்தும் இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாவிலிருந்தும் எடுக்க வேண்டும்.
[ஆதாரம்: அல் குர்ஆன்: சூரா அல் அஃராப் 7: 3, சூரா அல் ஹஷர் 59: 7, சூரா அந் நிஸா 4: 115]
இன்ஷா-அல்லாஹ்! தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.