Book Explanation-(Lesson 01 – 04) – இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்உஸுலுஸ்ஸலாஸா

ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விரிவுரை: அபூ அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பாரிஸ்)

மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் மிகவும் ஒரு அழகான முறையில் இப்புத்தகத்தை தொகுத்துள்ளார்கள்.

“இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற இப்புத்தகத்தில்; இமாம் அவர்கள் கூறவந்த மூன்று கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்; நான்கு விடயங்களைக் கற்றுக் கொள்வது கடமையாகும் என்று விழிப்பூட்டுகின்றார்கள். தொடர்ந்து.. மேலும் மூன்று விடயங்களைக் கற்றுக் கொள்வது கடமையாகும் என்று மீண்டும் விழிப்பூட்டுகின்றார்கள். அதன் பின்னரே தான் கூறவந்த கோட்பாட்டிற்குள் நுழைகின்றார்கள்.

அந்த நான்கு விடயங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் என்ன?

அந்த மூன்று விடயங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் என்ன?

பாடங்கள்: 01 தொடக்கம் 04

இன்-ஷாஃ அல்லாஹ்! அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகத்தின் 01 தொடக்கம் 04 வரையிலான பாடங்களை செவிமடுப்போம்!

இமாம் நஜ்தி அவர்கள் கூறவருகின்ற நான்கு விடயங்கள் மற்றும் மூன்று விடயங்கள் என்ன? அவைகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)