
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 08
மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)

மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)

அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். (ஸூரதுல் புரூஜ்: 15)

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.

யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.

அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்), மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன். (ஸூரதுல் ஹதீத்:03)

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் நீங்கள் கண்ணியமும், மகத்துவமும் உடைய இறைவனை; படைத்துப் பரிபாலிப்பவனை மகிமைப்படுத்துங்கள். (முஸ்லிம்:479)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.

அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன் (ஸூரதுல் பகரா:255)